கை, கால், வாய்ப் புண் நோய்: ஜோகூர் செல்ல அஞ்ச வேண்டாம்

கை, கால், வாய்ப் புண் நோய்: ஜோகூர் செல்ல அஞ்ச வேண்டாம்

1 mins read

பொருள்கள் வாங்கவும் பொழு தைக் கழிக்கவும் அண்டை நாடான மலேசியாவுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள் முன்னெச் சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தங்கள் பிள்ளைகளுக்குக் கை, கால், வாய்ப் புண் நோய் ஏற்படும் அச்சம் இருக்காது என்று ஜோகூர் மாநில சுகாதாரம், சுற்றுப்புறம், உழவுத் துறை நிர்வாகக்குழு தலைவர் டாக்டர் சாருடீன் ஜமால் நேற்று கூறினார். சுகாதாரமான பழக்கங்களைப் பின்பற்றும் குடும்பங்கள் ஜோகூர் பாரு அளிக்கக்கூடிய வசதி களையும் சுற்றுலா இடங்களையும் அனுபவிப்பதில் எந்த ஓர் இடை யூறும் நேராது என்றும் அவர் விவரித்தார்.

ஜோகூர் பாருவில் அதிகரித்து வரும் கை, கால், வாய்ப் புண் நோய் சம்பவங்களைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்வாண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 21 வரை ஜோகூரில் பதிவான மொத்த கை, கால், வாய்ப் புண் நோய் தொடர்பான 2,215 சம்பவங்கள் சென்ற ஆண்டு அதே காலகட்டத்தில் 1,607ஆக இருந்தது. இது 37 விழுக்காடு அதிகரிப்பு. இந்த நோய் மலேசிய நாடு முழுவதுமே அதிகரித்து வருவதால் சுகாதார அமைச்சு ஜூன் மாதத்தில் பொதுமக்களுக்குச் சுகாதார எச்சரிக்கை ஒன்றை விடுத்து இருந்தது.