'ஸ்கூட்' விமானக்கட்டணம் உயர்கிறது

'ஸ்கூட்' விமானக்கட்டணம் உயர்கிறது

1 mins read
29a5720e-3fe9-4733-b1d4-84294f3c0e05
-

மலிவு கட்டண விமானச் சேவையான 'ஸ்கூட்' நிறுவனம் அதன் பயணக் கட்டணங்களை செப்டம்பர் முதல் தேதியிலிருந்து 5 வெள்ளிமுதல் 30 வெள்ளி வரை உயர்த்தவுள்ளது. பயணக் கால அளவைப் பொறுத்துக் கட்டண உயர்வு அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மார்ச் 2016ல் ஆறு ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு எரிபொருள் விலை குறைந்திருந்ததால் ஸ்கூட் நிறுவனம் பயணிகள் கட்ட வேண்டிய கட்டணத்திலிருந்து எரிபொருளுக்கான கூடுதல் கட்டணத்தை நீக்கியது.

ஆனால், தற்போது உயர்ந்து வரும் விமான எரிபொருள் விலை, இந்தக் கட்டண அதிகரிப்புக்குக் காரணம் என்று நிறுவனம் அதன் அறிக்கையில் கூறியது. இதனைத் தொடர்ந்து எரிபொருளைச் சேமிப்பது, உற்பத்தித் திறனை மேம்படுத் துவது, வளங்களைப் குறைப்பது எனக் கட்டண விலையைக் கட்டுப்படுத்த வேறு வழிகளை நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.