தடை நீக்கம்: அறிவார்ந்த நகர் திட்டங்கள் மீண்டும் தொடக்கம்

தடை நீக்கம்: அறிவார்ந்த நகர் திட்டங்கள் மீண்டும் தொடக்கம்

1 mins read
Google News Preferred Icon

சிங்கப்பூர் தன்னுடைய அறிவார்ந்த நகர் திட்டங்களை மீண்டும் வேக மாகத் தொடங்கி இருக்கிறது. பாதுகாப்பு இல்லாத, பணி களுக்குப் பயன்படுத்தும் கணினி முறையுடன் கூடிய இணையத் தொடர்புகளைத் துண்டிக்குமாறு அரசாங்கம் மிக முக்கியமான 11 சேவைத் துறைகளுக்கு உத்தர விட்டுள்ளது. சிங்ஹெல்த் குழுமத்தின் இணையத் தரவு தளம் ஊடு ருவப்பட்டு தகவல்கள் திருடப் பட்டன. அதைத் தொடர்ந்து பெரிய அளவில் இணையப் பாதுகாப்பு பற்றிய மறுபரிசீலனை இடம் பெற்றது. அந்த நடவடிக்கை தற்போது முடிவடைந்துள்ளது. சிங்ஹெல்த் தாக்குதலை யடுத்து புதிய அறிவார்ந்த நகர் திட்டங்கள் சிலவற்றின் தொடக் கத்தை அரசாங்கம் நிறுத்தி வைத் திருந்தது.

அரசாங்கச் சேவை இணையப் பாதுகாப்புக் கொள்கைகள் மறுபரி சீலனையை தான் நடத்தி முடித்தி ருப்பதாக அறிவார்ந்த நகர் மற்றும் மின்னிலக்க அரசுக் குழுமம் (SNDGG) நேற்று கூட்டறிக்கை ஒன்றில் தெரிவித்தது. அரசாங்கத்தின் மிக முக்கிய மான முறைகளில் கூடுதலான பாதுகாப்பு அம்சங்களைத் தான் அமல்படுத்தப்போவதாகவும் அக் குழுமம் தெரிவித்தது.