துடிப்புமிக்க முதுமைக்காலத்தை ஊக்குவிக்கும் வெகுமதித் திட்டம்

துடிப்புமிக்க முதுமைக்காலத்தை ஊக்குவிக்கும் வெகுமதித் திட்டம்

1 mins read
abf0898d-b281-4395-bf9c-8fe6d4553ec6
-

துடிப்பான முதுமைக்காலத்தை ஊக்குவிக்கும் புள்ளிமுறை வெகுமதித் திட்டம் ஒன்று மூத் தோருக்கென அறிமுகம் செய்யப் பட்டது. ஆறு மாதங்கள் கழித்து திட் டத்தில் சேர்ந்த முதியோரின் மன விழிப்புணர்விலும் சமூகத் தொடர்புத் திறனிலும் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. திட்டத்தில் பங்கெடுப்பதற்காக வருகை அளிப்போர் எண்ணிக்கை யும் 20 விழுக்காடு அதிகரித்திருக் கிறது என்று தொண்டூழிய சமூக நல அமைப்பான 'ஏவா'வின் (AWWA) சுகாதார, மூத்தோர் பரா மரிப்பு இயக்குநர் திரு கீத் லீ கூறினார்.

நம் சமூகத்தில் ஓர் அங்கமாக தொடர்ந்து இருக்க, மூத்தோரின் உடல்நல, மனநல இயக்கத்தைப் பராமரிக்க வேண்டும் என்றும் அதன்வழி அவர்கள் துடிப்பான முதுமைக்காலத்தைப் பெறலாம் என்றும் அவர் விவரித்தார்.

'ஏவா'வின் டிமென்‌ஷியா பகல்நேரப் பராமரிப்பு நிலையங்களில் உள்ள முதியவர்களுக்கு அளிக்கப்படும் நடவடிக்கைகள் அவர்களின் இயக்கத் திறனையும் அறிவாற்றல் திறனையும் மேம்படுத்தும். படம்: 'ஏவா'