'பொருளியலுக்கு டிபிஎஸ் தொடர்ந்து முக்கிய பங்காற்றும்'

'பொருளியலுக்கு டிபிஎஸ் தொடர்ந்து முக்கிய பங்காற்றும்'

1 mins read

நிதித்துறை தொழில்நுட்பங்கள் காரணமாக வங்கித் துறை வரும் ஆண்டுகளில் பெரும் மாற்றம் காணும் என்றும் இந்தச் சூழலில் டிபிஎஸ் வங்கி தொடர்ந்து புத்தாக் கத்தோடு திகழ்ந்து எதிர்காலத் திற்கு ஏற்றது போல் உருமாறி வருவது தமக்கு மகிழ்ச்சி அளிப்ப தாகவும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவின் கையடக்கச் சாத னங்கள் வழியாக மட்டும் செயல் படக்கூடிய முதலாவது 'டிஜிபேங்க்' என்ற மின்னிலக்க வங்கி முறையை வெற்றிகரமான முறை யில் டிபிஎஸ் தொடங்கி இருப்ப தைத் திரு லீ குறிப்பிட்டார்.

அந்த முறைப்படி காகிதமோ, கையெழுத்தோ, வங்கி அலுவல கமோ எதுவுமே தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'டிஜிபேங்க்' இந்தியாவில் 2 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இருக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். டிபிஎஸ் வங்கியின் 50வது ஆண்டுவிழா இசை நிகழ்ச்சியில் பிரதமர் நேற்று இரவு உரை யாற்றினார். கேப்பிட்டல் தியேட்டரில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், டிபிஎஸ் வங்கி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு பியுஷ் குப்தா, முன் னாள் அமைச்சரான திரு எஸ் தனபாலன், காலமான திரு ஹான் சூய் சென்னின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட னர். திரு லீ நேற்று கலந்துகொண் டது மூன்றாவது பொன்விழாக் கொண்டாட்டமாக இருந்தது.