நிலநடுக்கத்தின் உக்கிரத்தை அமைச்சர் சண்முகம் விவரித்தார்

நிலநடுக்கத்தின் உக்கிரத்தை அமைச்சர் சண்முகம் விவரித்தார்

2 mins read
0ce06d36-9939-498c-bcde-4f08656bff04
-

இந்தோனீசியாவின் லொம்போக் தீவில் நிகழ்ந்த சக்கிவாய்ந்த நில நடுக்கத்தின் தாக்கங்கள் குறித்து தாம் கண்டவற்றை சிங்கப்பூரின் சட்ட, வெளியுறவு அமைச்சர் கா. சண்முகம் தமது ஃபேஸ்புக் பதிவில் விவரித்துள்ளார். 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து லொம்போக்கிலிருந்து வெளியேறி சிங்கப்பூர் செல்லும் விமானத்திற்காகக் காத்திருப்ப தாக நேற்றுக் காலை அவர் அந்தப் பதிவில் கூறினார். சிங்கப்பூருக்குப் பத்திரமாக வந்திறங்கிய பின்னர் நேற்று பிற்பகலில் செய்தியாளர்களிடமும் நிலநடுக்க அனுபவங்களை திரு சண்முகம் பகிர்ந்துகொண்டார். ஞாயிறு இரவு 8 மணியளவில் ஹோட்டலின் பத்தாவது தளத்தில் இருந்த தமது அறையில் தமது மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தபோது கட்டடம் திடீ ரென்று பயங்ரமாக ஆட்டம் கண்டதாக அவர் கூறினார். கட்ட டம் குலுங்கியதாகவும் சுவர்களில் கீறல்கள் விழுந்ததாகவும் அதனைத் தொடர்ந்து தாமும் பேராளர்களும் மிகவும் அவசிய மான உடைமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு உடனடியாக அங்கிருந்து வெளியேறியதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்க மின்மடல்களுடனான தமது மடிக் கணினியுடன் வெளியேறிய தாம் நேற்றுக் காலையில் ஹோட்டல் அறைக்குச் சென்று மேலும் சில பொருட்களை எடுக்க முடிந்ததாகக் குறிப்பிட்டார்.

லொம்போக்கின் மாட்டாரம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த துணை வட்டார பயங்கர வாத முறியடிப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக திரு சண்முகம் 11 பேர் அடங்கிய பேராளர்களுடன் சென்றிருந்தார். இந்தோனீசியாவும் ஆஸ்திரேலியாவும் இக்கூட்டத் திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

தாம் தங்கியிருந்த ஹோட்டல் அறை குலுங்கியதால் சுவரும் கழிவறையும் இப்படி ஆகிவிட்டதாக திரு சண்முகம் கூறினார். படம்: திரு சண்முகம் ஃபேஸ்புக்