ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய தலைவர் நீக்கம்

ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய தலைவர் நீக்கம்

1 mins read
Google News Preferred Icon

சிராங்கூன் ரோட்டிலுள்ள ஸ்ரீ வீர மாகாளியம்மன் ஆலயத்தின் நிர் வாகத் தலைவர் பதவியில் இருந்து திரு சிவகடாட்சத்தை உடனடியாக நீக்க அறநிறுவன ஆணையர் உத் தரவிட்டுள்ளார். சிங்கப்பூரின் ஆகப் பழமையான இந்து ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தில் கடுமையான நிர்வாகச் சீர்கேடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. வருங்காலத்தில் எந்தவொரு நிர்வாக வாரியத்தின் உறுப்பின ராகவோ அறக்கட்டளையின் முக் கிய அதிகாரியாகவோ அல்லது அறங்காவலராகவோ சிவகடாட்சம் செயல்படுவதற்கு தடையும் விதிக் கப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாகத்தில் கடுமை யான நிர்வாகச் சீர்கேடு நடந்திருப் பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்ட அம்சங்களைக் கவனத்துடன் பரி சீலித்த பின்னர் தலைவரை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஆணையரின் அறிக்கை தெரி விக்கிறது. சிவகடாட்சம் பொறுப் பாக இருந்த அறக்கட்டளையின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு அவரது செயல்பாடு பங்களித்திருந்ததை அல்லது காரணமாக இருந்ததை அறநிறுவன ஆணையர் அறிந் திருப்பதாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.