நாடாளுமன்றம் திங்கட்கிழமை கூடும்போது சிங்ஹெல்த் இணை யத் தாக்குதல் பற்றிய அமைச்சர் நிலை அறிக்கை தாக்கலாகும். அண்மையில் பயிற்சியின் போது ஒரு தேசிய சேவையாளர் மரணமடைந்தது தொடர்பான விவரங்களும் மன்றத்தில் தாக்க லாகும். சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் இருவரும் இணையத் தாக்குதல் பிரச்சினை பற்றிப் பேசுவர். இந்தத் தாக்குதல் தொடர்பில் இந்த இரு அமைச்சர்களிடத்தி லும் சுமார் 20 கேள்விகள் கேட் கப்பட்டு இருக்கின்றன.
தேசிய சேவை பயிற்சியின் போது ஏற்பட்ட மரணம் தொடர் பில் கண்டுபிடிக்கப்பட்ட விவரங் கள் பற்றியும் அந்த மரணத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்டு இருக் கும் நடவடிக்கைகள் குறித்தும் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் அறிக்கையைத் தாக்கல் செய்வார். கடந்த ஓராண்டு காலத்தில் தேசிய சேவையின்போது இரண்டு மரணச் சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. 19 வயது முழு நேர தேசிய சேவை யாளராக இருந்த டேவ் லீ என்பவர் கடந்த ஏப்ரலில் வெப்பத் தாக்குதல் காரணமாக மரண மடைந்துவிட்டார்.

