போதைப்பொருள் புழக்கம்: சோதனைச் சாவடிகளில் பிடிபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

போதைப்பொருள் புழக்கம்: சோதனைச் சாவடிகளில் பிடிபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
Google News Preferred Icon

போதைப்பொருளைத் தவறாக பயன்படுத்தியதன் தொடர்பில் சிங்கப்பூரின் பல்வேறு சோதனைச் சாவடிகளில் பிடிபட்டவர்களின் எண்ணிக்கை 2013 முதல் அதிகரித்து வருகிறது. கடந்த 2013ல் 47 ஆக இருந்த அந்த எண்ணிக்கை 2014ல் 65 பேராகக் கூடியது. இரண்டு ஆண் டுகளுக்கு முன் அந்த எண் ணிக்கை 78 ஆகியது. சென்ற ஆண்டில் கணிசமான அளவுக்கு எண்ணிக்கை உயர்ந்து இருக்கிறது என்று மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

கடந்த ஆண்டில் சோதனைச் சாவடிகளிலும் விமான நிலை யங்களிலும் 126 சிங்கப்பூர் குடி மக்களும் நிரந்தரவாசிகளும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலவரம் கவலை தருவ தாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார் கள். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த குற்றவியல் வழக் கறிஞர் ஆம்ரிக் கில், 49, சட்ட உதவி கேட்டு தன்னை அணுகிய முழுநேர தேசிய சேவையாளர்கள், வயது வந்த பெரியவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை முன்பைவிட அதிக மாக இருக்கிறது என்றார்.