$33 மில்லியன் செலவில் மின்தூக்கித் திட்டம்

$33 மில்லியன் செலவில் மின்தூக்கித் திட்டம்

1 mins read
efbe5294-c691-4f35-adca-410414f02bc8
-

செம்பவாங் நகர மன்றம், அந்த வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்கு களில் 280 மின்தூக்கிகளை மாற்ற $33 மில்லியன் மதிப்பிலான திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இதனால் 12,600 குடும்பங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படு கிறது.

உட்லண்ட்ஸ், அட்மிரல்ட்டி உட்பட செம்பவாங் குழுத்தொகுதி யின் பழைய வீடமைப்புப் பேட்டை களில் உள்ள 135 புளோக்குகளின் மின்தூக்கிகள் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத் திற்குள் மாற்றப்படும். கம்போங் அட்மிரல்ட்டியில் நேற்று நடைபெற்ற தேசிய தின நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானும் சுகாதார, உள்துறை அமைச்சுகளின் மூத்த நாடாளுமன் றச் செயலாளர் அம்ரின் அமினும் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் செய்தியாளர்களி டம் பேசிய திரு அம்ரின், மின் தூக்கிகளில் ஏற்பட்ட கோளாறுகள் குறித்து குடியிருப்பாளர்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்ட பிறகு மின்தூக்கிகளை மாற்ற முடிவெடுக்கப்பட்டது எனக் கூறினார்.

கம்போங் அட்மிரல்டியில் செம்பவாங் குழுத் தொகுதியின் மின்தூக்கித் திட்டம் பற்றி அறிவித்த போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானும் (வலது) மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமினும் அங்கு வந்திருந்த பிள்ளைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். படம்: செம்பவாங் நகர மன்றம்