ரொக்கமற்ற பரிவர்த்தனையில் மேலும் அதிக தொழில்கள்

ரொக்கமற்ற பரிவர்த்தனையில் மேலும் அதிக தொழில்கள்

1 mins read
94389d8c-3898-4288-b726-dd10a55bbffa
-
Google News Preferred Icon

சிங்கப்பூரிலுள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களில் மூன்றில் இரண்டு நிறுவனங்கள் வரும் 2023ஆம் ஆண்டுக்குள் ரொக்க மில்லா சேவையை வழங்கும் என்று ஓசிபிசி வங்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அத்தகைய 200 நிறுவனங் களிடம் ஓசிபிசி இந்த ஆய்வை நடத்தியுள்ளது. ரொக்கமில்லா சேவையில் காசோலை பயன்பாடும் இருக்காது என ஓசிபிசி நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

ஆய்வில் பங்கேற்ற நிறுவனங் களில் 45 விழுக்காட்டுக்கும் அதிக மானவை, 2020ஆம் ஆண்டு வாக்கிலேயே ரொக்க மில்லா சேவையை வழங்க விருப் ப தாக தெரிவித்துள்ளன. "சிங்கப்பூர் குறித்த காலத் துக்கு முன்னதாகவே தனது இலக்கை எட்டிவிடும்" என்று ஓசிபிசி கூறியது.

காசோலை பயன்பாடு அற்ற நிலையை எட்ட சிங்கப்பூர் 2025ஆம் ஆண்டு இலக்கைக் கொண்டுள்ளது. அதேபோல், மின் னிலக்க கட்டண செலுத்தலில் 20 விழுக்காடு மட்டுமே ஏடிஎம் தானியக்க இயந்திரங்களில் ரொக் க மாக எடுக்கப்படும் நிலையை 2020ல் எட்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சரும் நாணய ஆணையத்தின் இயக்குநர் சபை உறுப்பினருமான ஓங் யி காங் கூறியுள்ளார்.

'பேநவ்' என்பது வாடிக்கையாளர்கள் தங்களது தொலைபேசி எண் அல்லது அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி ஒரு வங்கியிலிருந்து வேறொரு வங்கிக்கு பணப் பரிவர்த்தனை செய்ய வழிவகுக்கும் சேவையாகும். படம்: தொடர்பு தகவல் அமைச்சு