கேரளா வெள்ளம்: வெளியேற்றப்பட்ட 59 சுற்றுப்பயணிகளில் ஏழு சிங்கப்பூரர்கள்

கேரளா வெள்ளம்: வெளியேற்றப்பட்ட 59 சுற்றுப்பயணிகளில் ஏழு சிங்கப்பூரர்கள்

1 mins read

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள 'பிளம்ப் ஜூடி' உல்லாச விடுதியில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 59 சுற்றுப்பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். அந்தப் பயணிகளில் ஏழு பேர் சிங்கப்பூரர்கள்.

இடுக்கி மாவட்டத்திலுள்ள மூணார் என்ற ஊரிலுள்ள அந்த விடுதியை வெள்ளம் சூழ்ந்ததைத் தொடர்ந்து, அங்குள்ளோர் ஒரு நாளுக்கு மேல் வெளியேற முடியாமல் சிக்கினர். பயணிகளை ஹோட்டல் பணியாளர்கள் வெளியேற்ற இயலா ததால் இந்திய ராணுவப் படையும் உள்ளூர் அதிகாரிகளும் அந்த பணியில் இறங்கினர். வெள்ளிக் கிழமை பிற்பகலில், அடைக்கப்பட்ட சாலை திறக்கப்பட்டதை அடுத்து, ஹோட்டலிலுள்ள சுற்றுப் பயணி களால் வெளியேற முடிந்தது. அந்தப் பயணிகள் மூணாரில், பாதுகாப்பாக 'டீ கன்ட்ரி' என்ற மற்றொரு ஹோட்டலுக்கு மாற்றப்பட்டனர். சுற்றுப்பயணக் குழுவில் இந் தியர்கள் மட்டுமின்றி ரஷ்யா, ஓமான் நாடுகளைச் சேர்ந்தவர் களும் உள்ளனர்.

வெள்ளத்தால் சேதமடைந்த சாலை திறக்கப்பட்டலும் அதன் வெளியாகச் செல்லும்போது ஆபத்துகள் இருந்ததாக திருவாட்டி எஸ். ராஜாங்கம் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் தெரிவித்தார். சாலையில் பெருங்கற்களும் கண்ணுக்குத் தெரியாத குழிகளும் இருந்ததாக அவர் கூறினார். சென்னையிலுள்ள துணைத் தூதரக அதிகாரியுடன் தொடர்பில் சிங்கப்பூரர்கள் இருப்பதாக திருவாட்டி ராஜாங்கம் தெரிவித்தார்.