சிங்கப்பூர் ஆடவரும் அவரது வருங்கால மனைவியும், மேலும் இரண்டு தைவானிய சுற்றுப் பய ணிகளும் போலந்து அதிபர் மாளி கைக்குள் அழைக்கப்பட்டனர். போலந்து அதிபர் திரு ஆன்டிர் செஜ் டுடா தேநீர் விருந்துக்காக கடந்த மாதம் அவர்களைக் கார ணமின்றி அழைத்தார். டான் டொக் சேங் மருத்துவ மனையில் மூத்த மருத்துவத் தொழில்நுட்பராகப் பணியாற்றும் திரு கந்தன் ஆறுமுகம் தமது வருங்கால மனைவி குமாரி ஈவா பாவ்லெக்குடன் போலந்து தலைநகர் வார்ஷாவுக்குச் சென் றார். சிங்கப்பூரின் பிரஞ்சு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் குமாரி ஈவா, போலந்தில் பிறந்தவர்.
போலந்தில் அவர்கள், அதிபர் மாளிகையின் பக்கம் நடந்து சென்றுகொண்டிருந்போது தங் களை புகைப்படம் எடுத்துத் தருமாறு அங்கிருந்த ஒருவரிடம் கேட்டார். அந்த ஆடவர், அதிபர் மாளிகையின் ஊழியர். அவருடன் இருந்த மற்றோர் ஊழியர், அதிபர் மாளிகையைச் சுற்றிப் பார்க்க அந்த தம்பதியரை அழைத்தார். முதலில் தயக்கமாக இருந்த திரு கந்தனை குமாரி ஈவா ஊக்குவித்தார். இறுதியாக அவர்கள் இருவரும் அங்கு செல்லச் சம்மதித்தனர். தைவானைச் சேர்ந்த தம்பதியர் இருவரும் மாளிகையைச் சுற்றிப் பார்க்க அழைக்கப்பட்டனர்.
அதிபர் மாளிகையைச் சுற்றி காட்ட போலந்தின் அதிபரே நேரில் வருவார் என்று அப்போது அவர் கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் வருகையைக் காட்டும் படங்கள் போலந்து அதி பர் மாளிகை தொடர்பான ஃபேஸ் புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டன. அதிபர் மாளிகையின் உல்லா சமான மறுபக்கத்தைக் காட்டுவது அந்த ஃபேஸ்புக் பக் கத்தின் நோக்கம். மாளிகைக்கு வந்திருந்த நால் வரிடம், அதிபர் அவர்களுடன் தேநீர் விருந்தில் கலந்துகொள்ளப் போகிறார் என்று பணியாளர்கள் தெரிவித்தனர். அதனைக் கேட்ட திரு கந்தன் அப்போது திகைப்படைந்ததை காணொளியில் பதிவான அவரது முகபாவம் காட்டியது.
வார்சாவில் உள்ள அதிபர் மாளிகையில் (இடமிருந்து) குமாரி இவா பவ்லெக், திரு கந்தன் ஆறுமுகம், திருவாட்டி ரோசா டெங், திரு ஷெர்ரி லீ, போலந்து அதிபர் ஆன்டிர்செஜ் டுடா. படம்: டுவிட்டர்/ ஆன்டிர்செஜ் டுடா

