தெம்பனிசில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீட் டின் தரைத்தளத்தில் அமைந்திருக் கும் வீட்டு வாசலின் படிக்கட்டுகள் மீன்தொட்டியாக மாற்றப்பட்டிருக் கிறது. அதில் ஒன்பது 'கொய்' மீன் களும் அழுக்குகளைத் தின்னும் இரண்டு 'சக்கர்' மீன்களும் நீந் திக்கொண்டிருக்கின்றன. தெம்பனிஸ் ஸ்திரீட் 41ல் உள்ள தரைத்தள வீட்டு முகப்பில் தான் இந்த வித்தியாசமான மீன் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் வெளிப்புறத்தில் பச்சை பசேலென காட்சியளிக்கும் செடி கள் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்தான் நீல நிறத்திலான மீன் தொட்டி உள்ளது.
மீன் தொட்டி பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் கேட்ட தற்கு வீட்டின் சீன உரிமையாளர் கள் பதில் கூற மறுத்துவிட்டனர். ஆனால் அந்த மீன்தொட்டி ஆண் டுக் கணக்கில் அங்கு இருப்பதாக அக்கம்பக்கத்தார் தெரிவித்தனர். படிக்கட்டுகளில் மீன்தொட்டி அமைந்திருப்பதாலும் பக்கத்து வீட்டையும் உரிமையாளர்கள் வாங் கியுள்ளதால் அந்த வீட்டு வாசல் வழியாக அவர்கள் வீட்டுக்குள் செல்வார்கள். "நாங்கள் இங்கு ஆறு ஆண்டு களாக வசித்து வருகிறோம். இந்த மீன் தொட்டி குறைந்தது மூன்று ஆண்டுகளாக இங்கு உள்ளது," என்றார் திருவாட்டி நூர்ஃபத்தியா. "இந்த உன்னத மீன்தொட்டி பார்ப்பதற்கு அழகாக உள்ளது. இதை சாதாரணமாக எங்கும் பார்க்க முடியாது," என்று மேலும் கூறினார் குழந்தை பராமரிப்பாள ரான 31 வயது நூர் ஃபத்தியா.
தெம்பனிஸ் தரைத்தள வீட்டின் படிக்கட்டுகளை அழகிய மீன் தொட்டியாக மாற்றியுள்ளனர் அவ்வீட்டின் உரிமையாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

