சுவர் மீது மோதிய டாக்சி

1 mins read

பிடோக் நார்த் சந்தை மற்றும் உணவங்காடி நிலையத்தில் உள்ள ஒரு சுவர் மீது டாக்சி ஒன்று நேற்று மோதியது. இந்தச் சம்பவம் அங்கு இருந்த வழிப்போக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புளோக் 216 பிடோக் நார்த் ஸ்திரீட் 1ல் முற்பகல் 11.50 மணி அளவில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து தனக்குத் தகவல் கிடைத் ததாக போலிஸ் கூறியது. டாக்சி ஓட்டுநர் மருத்துவ மனைக்குச் செல்ல மறுத்துவிட்டார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. டாக்சியை பின்னோக்கிச் செலுத்திய அதன் 68 வயது ஓட்டுநர், சுவர் மீது மோதியதாக அறியப்படுகிறது. காரை தாம் நிறுத்துவதற்குப் பதிலாக தவறுதலாக விசைப் பல கையை (accelerator) அழுத்தி விட்டதாக வான்பாவ் நாளிதழிடம் அவர் கூறினார்.