யூடியூப்பில் பிரபலமாக இருக்கும் கிளிக்நெட்வொர்க் ஒளிவழியில் இடம்பெறும் மூன்று புதிய இணையத்தள தொடர்களில் குடும்பம், நட்பு, உடல்நலம், பிள்ளைப் பேறு ஆகிய அம்சங்கள் இடம்பெறவிருக்கின்றன. மேலும் பல சிங்கப்பூர் நேயர்களுக்குப் பொதுச் சேவை ஒளிபரப்புகளை வழங்குவதற்கான தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத் திட்டங்களின் ஒரு பகுதியாக இது இடம்பெறுகிறது.
யுடியூப்பின் கிளிக்நெட்வொர்க் ஒளிவழிக்குச் சொந்தமான முன்கிசூப்பர்ஸ்டார் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாக இந்த ஆணையம் அறிவித்தது. முதலாவதாக பொதுமக்கள் உடல்நலத்துக்கு ஏற்ற வாழ்க்கை பாணியைக் கைகொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 'நோ ஸ்வெட்' என்ற தொடர் தொடங்கப்பட்டுள்ளது. இதர இரண்டு தொடர்கள் ஆகஸ்ட் 24, அடுத்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதிகளில் தொடங்கப்படும்.
இதனிடையே, மின்னிலக்கத் தளங்களில் பொதுச் சேவை ஒளிபரப்புகளை அதிகமாக இடம்பெறச் செய்வது இந்தக் காலத்தில் அதிக நன்மை பயக்கும் என்றார் முன்கிசூப்பர் ஸ்டார் பிக்சர்ஸ் நிறுவனர் திருவாட்டி கில்லியன் டான்.

