சட்டவிரோதமாக காரை ஓட்டி மரணம் விளைவித்தார்

சட்டவிரோதமாக காரை ஓட்டி மரணம் விளைவித்தார்

1 mins read

ஓங் ஹான் யூ என்பவர் 2016 மே மாதம் தனக்கு 17 வயதானபோது வாடகை கார் ஒன்றைச் சட்ட விரோதமான முறையில் பெற்று அதை ஓட்டிச்சென்று சாலையில் ஒருவருக்கு மரணத்தை ஏற் படுத்திவிட்டார். இறந்துபோனவர், ஒரு மோட் டார்சைக்கிளில் பின்னிருக்கை யில் அமர்ந்து சென்றுகொண்டு இருந்தார். ஓங்கிற்கு இப்போது 20 வயதாகிறது. அவர் தேசிய சேவை ஆற்றி வருகிறார். ஏமாற்றியது, அலட்சியமாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற் படுத்தியது, விபத்து நிகழ்ந்த தும் உதவத் தவறியது ஆகியவை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டு களின் பேரில் ஓங் நேற்று குற் றத்தை ஒப்புக்கொண்டார். சீர்திருத்தப் பயிற்சித் தண்ட னைக்கு ஓங் பொருத்தமானவரா என்பதை மதிப்பிட ஏதுவாக ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்யும் படி நீதிபதி உத்தரவிட்டார். ஓங் ஆகஸ்ட் 20ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன் னிலையாவார்.