குடிநீர்க் குழாய்க்குச் சேதம்: $44,000 அபராதம்

குடிநீர்க் குழாய்க்குச் சேதம்: $44,000 அபராதம்

2 mins read
e3bfe3b9-f512-4b0a-beba-c70bb1c4c47f
-

தெம்பனிஸ் அவென்யூ 5ம் தெம் பனிஸ் சென்ட்ரல் 2ம் சந்திக்கும் இடத்திற்கு அருகே இருக்கும் வேலை இடம் ஒன்றில் முக்கியமான குடிநீர்க் குழாயைச் சேதப்படுத்திய தற்காக சிசிஇசிசி (CCECC Singapore) சிங்கப்பூர் என்ற நிறுவனத் திற்கு $44,000 அபராதம் விதிக் கப்பட்டது. சேதப்படுத்தப்பட்ட குழாய் 30 செ.மீ. விட்டம் உள்ளது என்றும் இந்தச் சம்பவம் 2017 நவம்பர் 3ஆம் தேதி நிகழ்ந்ததாகவும் பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று தெரிவித்தது. குழாய் சேதம் அடைந்ததன் காரணமாக தண்ணீர் பக்கத்தில் இருக்கும் சாலையில் வழிந்து ஓடியது. அருகே இருக்கும் நான்கு வர்த்தகக் கட்டடங்களுக்கு தண் ணீர் வழங்கீடு பாதிக்கப்பட்டது. குழாய் சேதப்படுத்தப்பட்டதன் விளைவாக சுமார் 4,000 கனஅடி தண்ணீர் வீணாகிவிட்டது. இந்தத் தண்ணீரைக் கொண்டு ஒலிம்பிக் அளவுள்ள ஒன்றரை நீச்சல் குளத்தை நிரப்பிவிடலாம் என்று கழகம் தெரிவித்தது.

தெம்பனிஸ் அவென்யூ 5ல் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்தக் கட்டுமானத்தின் ஒரு பகுதியாக வேலைகளைச் செய்ய ஹெக்சகோன் கன்ஸ்ட்ரக் ஷன் என்ற நிறுவனம், சிசிஇசிசி நிறுவனத்தை துணை ஒப்பந்த நிறுவனமாக அமர்த்தி இருந்தது. கட்டுமான இடத்தில் பூமிக்குக் கீழே எங்கெங்கு தண்ணீர்க் குழாய் செல்கிறது என்பதும் அந்தக் குழாய்களுக்கு ஆபத்து வராமல் எப்படி எப்படியெல்லாம் பணிகளைச் செய்யவேண்டும் என்று தெரிவிக் கின்ற விவரங்களும் அடங்கிய ஒரு நகல் அந்த நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது. என்றாலும் அந்தக் குழாய்கள் செல்லும் இடங்களைத் தோண்டு வதற்கு முன் அந்த நிறுவனம் பொது பயனீட்டுக் கழகத்திடமிருந்து அங்கீகாரத்தைப் பெறவில்லை. அதோடு, அந்தக் கட்டுமான நிறுவனம் போதிய அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வில்லை என்பதும் தெரியவந்தது. 2018-08-14 06:00:00 +0800