சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் பாரு வுக்குச் செல்லும் கார்கள் இனி ஜோகூர் பாரு சுல்தான் இஸ்கந்தர் சோதனைச் சாவடியில் தங்கள் 'டச் அண்ட் கோ' அட்டைகளில் பணம் நிரப்ப முடியாது. இந்தச் சேவை நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 13ஆம் தேதி) நிறுத்தப்பட்டது என்று காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. சேனல் நியூஸ் ஏஷியாவின் கேள்விகளுக்கு நேற்று பதில் அளித்த ஜோகூர் மாநில பொதுப் பணி, உள்கட்டமைப்பு, போக்கு வரத்துக் குழுவின் தலைவர் திரு மஸ்லான் பூஜாங், "சுல்தான் இஸ் கந்தர் கட்டடத்தில் சிங்கப்பூரிலி ருந்து ஜோகூர் நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கான 'டச் அண்ட் கோ' அட்டை பணம் நிரப்பும் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. "தங்கள் 'டச் அண்ட் கோ' அட்டைகளில் பணம் நிரப்புவதற் காக வாகனமோட்டிகள் இறங்குவ தால் அங்கு போக்குவரத்து நெரி சல் ஏற்படுகிறது. ஆனால், ஜோகூ ரிலிருந்து சிங்கப்பூரை நோக்கிச் செல்லும் கார்களுக்கான 'டச் அண்ட் கோ' பணம் நிரப்பும் சேவை இன்னும் நடப்பில் உள் ளது," என்று விளக்கினார்.
'டச் அண்ட் கோ' பணம் நிரப்பும் சேவை நிறுத்தப்பட்டது
1 mins read
-

