சிங்கப்பூரில் முதியோர் பராமரிப்புத் தேவைகளை நிறைவேற்ற போதிய அளவுக்கு வளம் இருப்பதாக சுகா தார அமைச்சு உறுதிபட தெரி வித்து இருக்கிறது. இங்கு கடந்த காலத்தில் முதி யோர் பராமரிப்புக்கான சேவைகள் பலப்படுத்தப்பட்டு வந்திருக்கின் றன என்று அந்த அமைச்சின் பேச்சாளர் ஒருவர் நேற்று விளக்கினார். சிங்கப்பூரில் மக்கள்தொகை வேகமாக மூப்படைந்து வருகிறது என்றும் அதற்குப் போதிய வசதிக ளையோ மானியங்களையோ அர சாங்கம் ஏற்படுத்தித் தரவில்லை என்றும் லியன் அறநிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது. இதற்குப் பதிலளிக்கும் வகை யில் விளக்கம் அளித்த அமைச்சு, 2020ஆம் ஆண்டு வாக்கில் 6,200 பகல்நேர பராமரிப்பு இடங்களை யும் 10,000 இல்லப் பராமரிப்பு இடங்களையும் 17,000 தாதிமை இல்லப் படுக்கைகளையும் கொண் டிருக்கவேண்டும் என்ற இலக்கை நிறைவேற்ற அமைச்சு சரியான வேகத்தில் செயல்பட்டு வருவதாக கூறியது.
முதியோர் பராமரிப்பில் தேவை அளவுக்கு வளம்
1 mins read
-

