பொதுப் பிரச்சினைகளைக் களைய அரசு உதவும்

பொதுப் பிரச்சினைகளைக் களைய அரசு உதவும்

1 mins read
7df228e6-4ee2-463d-8a97-9d2687d707ee
-

பொதுவான பிரச்சினைகளைக் களைய நிறுவனங்களுடன் அரசாங்கம் சேர்ந்து செயல்படத் தயாராக உள்ளது என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட்(படம்) தெரிவித்துள்ளார். சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்காக சிங்கப்பூர் சீனர் வர்த்தக, தொழில்சபை நேற்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசினார். மின்னிலக்க இடையூறுகளை எதிர்நோக்குவதில் சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து ஒத்துழைப்புகளை வழங்கி செயல்பட வேண்டும். உலகளாவிய விரி வாக்கத்துக்கும் அவை ஒன்றுபட்ட முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று திரு ஹெங் கேட்டுக் கொண்டார்.

ஒன்றாகச் செயல்பட வேண்டும். அதற்காக போட்டிபோட வேண்டும் என்று அர்த்தமல்ல. பொதுவான பிரச்சினைகளில் பொதுவான தீர்வை எட்ட பல துறைகளில் ஒன்றுபட்டு செயல்படுவது அவசியம் என்றார் அவர். இந்த வகையில் பொதுவான தீர்வுக்கு நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்பட அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார். பல்கலை கழகங்கள், தொழிற் துறை, அரசாங்கம் ஆகிய மூன்று குழுக்களாக ஒன்றுபட்டு செயல்படலாம் என்று அமைச்சர் ஹெங் ஆலோசனை வழங்கினார்.