தொடக்கநிலை, உயர்நிலை வகுப்புகள் ஜனவரி 2ல் தொடங்கும்

தொடக்கநிலை, உயர்நிலை வகுப்புகள் ஜனவரி 2ல் தொடங்கும்

1 mins read
00045867-c21a-4464-8218-62d3ead88227
-
Google News Preferred Icon

கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் அனைத்து தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளின் கல்வியாண்டு ஜனவரி 2ஆம் தேதி புதன்கிழமை அன்று தொடங்கும். கல்வி ஆண்டின் இறுதி நாள் நவம்பர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்றும் நேற்று கல்வி அமைச்சு அறிவித்தது. தொடக்கக் கல்லூரிகளிலும் மில்லெனிய கல்விக் கழகத்திலும் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் பிப்ரவரி முதல் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குவார்கள். மற்ற மாணவர்கள் ஜனவரி 7ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்குவர். இளையர் தினம் ஜூலை 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனுசரிக்கப்படுவதால் மறுநாள் பள்ளி விடுமுறையாக அமையும். வழக்கம்போல் எல்லா மாணவர்களுக்கும் நான்கு விடுமுறை காலகட்டங்கள் மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் இருக்கும்.