சீனாவின் தொழில்நுட்ப நிறுவன மான அலிபாபா, புதிய தொழில் நுட்பக் காட்சி நிலையத்தை சிங்கப்பூரில் திறந்து வைப்பதாக அறிவித்துள்ளது. முகத்தை அடையாளம் காணும் உணர் கருவிகள், மெய்நிகர் தொழில் நுட்பம் போன்ற வற்றைக் கடைச்சூழலில் பயன் படுத்தும் அனுபவத்தை அந்த காட்சி நிலையம் வருகையா ளர்களுக்கு வழங்கும். 'கிளவுட்' தொழில்நுட்பத்தை வழங்குவதில் கூகுள், அமெசான் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து அனைத்துலக அளவில் கடும் போட்டியை எதிர்நோக்கும் தறு வாயில் அலிபாபா இந்த மாறுபட்ட முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்நிலையம் அடுத்த மாதத் திற்குள் திறப்பதற்கான திட்டம் இருப்பதாக சிங்கப்பூர், இந்தோனீ சியா ஆகியவற்றுக்கான 'அலிபாபா கிளவுட்' நிர்வாகி திரு லியோன் சென் நேற்று இங்கு நடைபெற்ற அலிபாபா கிளவுட் உச்சநிலைக் கூட்டத்தில் தெரி வித்தார்.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நிகழ்ச்சியைத் திறந்துவைத்தார். அதில் 'அலிபாபா கிளவுட்', தரவு ஆய்வு, அன்றாடப் பொருட்களில் இணையம் உள்ளிட்ட துறை களுடன் ஒன்பது புதிய தயாரிப்பு களை வெளியிட்டது. மேலும், மாணவர்களுக்கான பயிற்சிக் கல்வி தொடர்பில் அந்நிறுவனம், தேசிய பல்கலைக் கழகத்துடன் புரிந்துணைர்வு குறிப்பு ஒன்றிலும் நேற்று கையொப்பமிட்டது.
சிங்கப்பூர்க் கடை ஒன்றில் 'அலிபே' ரொக்கமில்லாக் கட்டண முறை பயன்படுத்தப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

