1,249ஆக அதிகரித்துள்ள கை, கால், வாய்ப் புண் நோய் சம்பவங்கள்

1 mins read

கை, கால், வாய்ப் புண் நோய் தொடர்பான சம்பவங்களின் எண்ணிக்கை ஜூலை 29க்கும் ஆகஸ்ட் 4க்கும் இடைப் பட்ட வாரத்தில் 1,249 ஆனது. இது இவ்வாண்டின் ஆக அதிகமான எண்ணிக்கை என்று அண்மைய புள்ளி விவ ரங்கள் தெரிவித்துள்ளன. இதே காலகட்டத்தில் சென்ற ஆண்டு இருந்த 868 கை, கால், வாய்ப் புண் நோய் சம்பவங்களைவிட இது ஒன்றரை மடங்கு அதிகம். கை, கால், வாய்ப் புண் நோயினால் பினாங்கு மாநிலத் தில் 17 மாத ஆண் குழந்தை இவ்வாண்டு ஜூன் மாதம் இறந்த சம்பவம், சரவாக் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வயது ஆண் குழந்தை இறந்த சம்பவம் ஆகியவற்றைத் தொடர்ந்து சிங்கப்பூரில் இந்நோய் குறித்த பதற்றம் நிலவி வருகிறது. பாலர் பள்ளி நிறுவனங்களுக்கும் முதல்வர்களுக்கும் இம்மாதத் தொடக்கம் முதல் விழிப்புடன் இருக்குமாறும் சுகாதாரத்தைக் கடைபிடிக்குமாறும் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு ஆலோசனைக் குறிப்பு ஒன்று அனுப்பப்பட்டது.