தேசிய சுற்றுப்புற வாரியம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், ஜூரோங் நகராண்மைக் கழகம் ஆகியவற்றின்கீழ் உள்ள 12,000 உணவுக்கடைகளின் மின்-கட்டண முறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அதிகபட்சமாக இரண்டு பிரதான நிறுவனங்கள் நியமிக்கப்பட உள்ளன. நிறுவனங்களை 'எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்' அமைப்பு, தேசிய சுற்றுப்புற வாரியம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஆகிய அமைப்புகள் நியமிக்கும். இதன்வழி அனைத்து கட்டணமுறைகளும் ஒரே பிரதான கட்டமைப்பின்கீழ் கொண்டு வரப்படும். இதனால் வாடிக்கையாளர்களுக்குச் சிரமம் ஏற்படுவதுடன் வியாபாரங்களுக்கும் கூடுதல் செலவாகிறது. இதுவரை உணவுக் கடைக்காரர்களின் வரவு செலவில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் வகையில் பரிவர்த்தனைகள் இனி விரைவாக நடந்தேறுவதுடன் பரிவர்த்தனைக் கட்டணங்களும் குறைவாக இருக்கும் என்பதால் பலர் இத்திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.
உணவுக்கடைக்காரர்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனையில் ஈடுபட உதவி
1 mins read

