'லாட்டரி' முறையில் பொருள் வழங்கும் இயந்திரங்கள்

'லாட்டரி' முறையில் பொருள் வழங்கும் இயந்திரங்கள்

1 mins read
6b769003-ba01-4c37-bf3e-045d8800baac
-
Google News Preferred Icon

பேரங்காடிகளில் காணப்படும் இயந்திரங்கள் பத்து வெள்ளி கட்டணத்தில் வழங்கும் மர்மப் பெட்டியில் திறன்பேசி, ஆடம்பரக் கைப்பை இருப்பதாக அவற்றை விநியோகம் செய்யும் நிறுவனங் கள் கூறினாலும் பெரும்பாலான பெட்டிகளில் நாணயப் பை, யுஎஸ்பி சார்ஜர் போன்ற விலை குறைந்த பொருட்களே உள்ளன. இதன் தொடர்பாகப் பணத் தைப் பெற்றுக்கொண்டு மர்மப் பரிசுகளை வழங்கும் இத்தகைய லாட்டரி முறை இயந்திரங்கள்வழி சில வியாபாரிகள் பொதுச் சூதாட்ட மனைகள் சட்டத்தை மீறுவதாக போலிஸ் பேச்சாளர் கூறினார்.

இச்சட்டத்தின்கீழ் குற்றம் நிரூ பிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 20,000 வெள்ளிக்கும் 200,000 வெள்ளிக்கும் இடைப்பட்ட அபராத தொகையும் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த இயந்திரங் களை இயக்கும் வணிகர்கள் மறு படியும் அவற்றை மீட்டுக்கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள் ளனர். சிங்கப்பூரில் பொருட்கள் வழங்கும் இயந்திரங்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளன. இத்தகைய குறைந்தது நான்கு இயந்திரங்களின் செயல்முறையை நடத்தும் நிறுவனங்கள் தீவு முழு வதும் உள்ளன என்றும் கூறப்பட் டது.

அவ்வாறு செய்யாமல் சட்டத் தைத் தொடர்ந்து மீறுவோர் மீது போலிஸ் தகுந்த நடவடிக்கை எடுப்பர் என்றும் பேச்சாளர் கூறினார்.

அங் மோ கியோ ஹப்பின் இரண்டாம் மாடியில் காணப்படும் பொருள் வழங்கும் இயந்திரங்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்