$1.03 மி. போலிப் பொருட்கள் பறிமுதல்

$1.03 மி. போலிப் பொருட்கள் பறிமுதல்

1 mins read
f5affcde-0daf-40fe-9439-aa6c4710d5ad
-
Google News Preferred Icon

போலிப் பொருட்களுக்கு எதிராக நான்கு கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் $1.03 மில்லியன் பெறுமானமுள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்தச் சோதனை கடந்த செவ்வாய்க் கிழமை (ஆகஸ்ட் 14) நடந்ததாக அதி காரிகள் நேற்று முன்தினம் தெரிவித்தனர். போலியான கணினி பாகங் கள், துணைக்கருவிகள் ஆகிய வற்றின் விற்பனையில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 53 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். இதற்கான விசார ணையில் 35 வயது ஆடவர் ஒருவரும் 36 வயதான மற்றோர் ஆடவரும் உதவி வருகின்றனர். குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், சிம் லிம் கடைத்தொகுதியிலுள்ள நான்கு கடைகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்திய பின்னர் அந்த ஆடவரைக் கைது செய்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்தது. அனுமதியின்றி பல்வேறு வணிக முத்திரைகளைக் கொண் டுள்ள சுமார் 6,000 பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டன.

அனுமதியின்றி பல்வேறு வணிக முத்திரைகள் கொண்டுள்ள சுமார் 6,000 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. படம்: சிங்கப்பூர் போலிஸ் படை