பாலர் கல்வி திட்டத்தில் தமிழ்

2 mins read
76aa6dc0-1cb9-4770-b95b-1def06ff74a8
-

தஞ்சோங் பகார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்த 'கிட்ஸ் அண்ட் பேரன்ட்ஸ் ஃபியஸ்டா' (Kids and Parents Fiesta) நிகழ்ச்சி நேற்று ஜங்ட தொடக்கநிலைப் பள்ளியில் கிட்டதட்ட 100 பேரின் பங்கேற்புடன் நடந்தது.

சிங்கப்பூர் இந்தியர் மேம் பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) 'லிட்டரசி அண்ட் நியூமரசி' திட்டம் ஜங்ட பள்ளியில் மார்ச் 21ஆம் தேதியிலிருந்து ஒவ் வொரு சனிக்கிழமையும் மூன்று முதல் ஆறு வயது வரையிலான பாலர்பள்ளி மாணவர் களுக்காக நடத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களையும் பெற்றோ ரையும் அங்கீகரிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் சீனப் பெண் ஒருவரைத் திருமணம் செய்த 41 வயது திரு கோபிநாத் செல்வராஜா, இத்திட் டத்தால் தமது இரண்டு பிள்ளை கள் பயனடைந்ததாகக் கூறினார். தம் மனைவிக்குத் தமிழ் தெரி யாத காரணத்தால் வீட்டில் பெரும்பாலும் ஆங்கில மொழியின் புழக்கம் அதிகமாக உள்ளது என்றும் பிள்ளைகள் அதனால் தமிழை அதிகம் பயன்படுத்துவ தில்லை என்றும் திரு கோபிநாத் கூறினார்.

"மலேசியாவில் தங்கியுள்ள என் பெற்றோரைச் சந்திக்கும் போது மட்டும் குடும்பத்துடன் என் பிள்ளைகள் தமிழைப் பயன் படுத்துவர்.

பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா (நடுவில்) பாரதியார் வேடத்தில் உள்ள ஒரு சிறுவனுக்குப் பரிசு வழங்குகிறார். தஞ்சோங் பகார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு உறுப்பினர் திரு தாம் சண்முகம் (இடக்கோடி) மாணவர்களின் பெயர்களை அறிவிக்கிறார். படம்: ஸ்டரெய்ட்ஸ் டைம்ஸ்