சிங்கப்பூர் நிறுவனங்கள் சீனாவில் உருவாக்கியுள்ள தொழில்நுட்பப் பூங்கா

சிங்கப்பூர் நிறுவனங்கள் சீனாவில் உருவாக்கியுள்ள தொழில்நுட்பப் பூங்கா

1 mins read

சீனாவின் சீச்சுவான் மாநிலத்திலுள்ள செங்டு நகரில் சிங்கப்பூர் நிறுவனங்கள், அந்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கியுள்ள தொழில்நுட்பப் பூங்கா (படம்) அடுத்த ஆண்டின் முற்பகுதியில் இயங்கத் தொடங்கும். அனைத்துலக நாடுகளைச் சேர்ந்த சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அப்போது அங்கு தங்களது அலுவலகங்களை அமைக்கும். அதிநவீன தொழில்நுட்பத் தொழிற்பேட்டையும் குடியிருப்புப் பகுதியாகவும் திகழப்போகும் 'சிங்கப்பூர்=சீச்சுவான் அதிநவீன தொழில்நுட்பப் புத்தாக்கப் பூங்கா' என்ற இந்தத் திட்டம், பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து 33.9 பில்லியன் யுவான் ( $6.8 பில்லியன்) தொகையை ஈர்த்தது. தகவல் தொழில்நுட்பம், உயிரியல் துறைகளைச் சேர்ந்த சுமார் 34 நிறுவனங்கள், அதில் தங்களது வட்டார தலைமையகங்களை அமைப்பதற்கான நிலத்தைப் பெற்றுள்ளன. அவற்றில் 2-0 நிறுவனங்கள், கட்டுமானப் பணிகளை ஆரம்பித்துள்ளன.