கேரளாவுக்கு மற்ற மாநிலங்கள் நிதியுதவி

கேரளாவுக்கு மற்ற மாநிலங்கள் நிதியுதவி

1 mins read
4c26aa9b-1cb2-4aeb-842c-2a3523525989
-

ஹைதராபாத்: கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரள மக்கள் துயரத்தில் மூழ்கி யுள்ள இந்த சமயத்தில் அண்டை மாநிலங்கள் உதவிக் கரம் நீட்டி யுள்ளன. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மூன்று மாநி லங்களும் தனித்தனியாக கேரளா வுக்கு வெள்ள நிவாரண நிதியை அறிவித்துள்ளன.

பிரதமர் மோடி ஏற்கெனவே 500 கோடி ரூபாய் நிதி வழங்கப் படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு தெலுங்கானா மாநில அரசு சார்பில் ரூ.25 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் சந்திர பாபு தலைமை யிலான ஆந்திரா அரசாங்கமும் ரூ.10 கோடி வெள்ள நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

முன்னதாக கேரளாவுக்கு ரூ. 5 கோடி நிவாரண நிதி வழங் கப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேலும் ஐந்து கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று நேற்று அறிவித்தார். டெல்லி அரசாங்கம் சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி னார். பீகார், ஹரியானா மாநிலங் களும் தலா பத்து கோடி நிதி யுதவியை அறிவித்துள்ளன. மகாராஷ்டிரா மாநில அரசும் கேரளாவுக்கு 20 கோடி ரூபாய் நிவாரண நிதியை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.