சாஸ் என்றழைக்கப்படும் சமூக சுகாதார உதவித் திட்டம், வரு மான வரம்பைக் கருத்தில் கொள் ளாது நாள்பட்ட நோயுடன் சிரமப் படும் அனைத்து சிங்கப்பூரர்களுக் கும் நீட்டிக்கப்படுவதாக பிரதமர் லீ அறிவித்தார். "இதன் மூலம் உதவி மானி யத்துடனான மருத்துவ சிகிச் சைக்கு அவர்கள் தகுதி பெறுவ தோடு அவர்களின் வருமான அளவுக்கு ஏற்ற அனுகூலங்களைப் பெற முடியும்.
"இந்த நீட்டிப்பு எப்போது நடை முறைக்கு வரும் என்பது போன்ற விரிவான தகவல்களை சுகாதார அமைச்சு பின்னர் வெளியிடும். "தற்போது சாஸ் திட்டம் குறைந்த வருமானம் முதல் நடுத் தர வருமானம் வரை உள்ள சிங்கப்பூர் குடும்பத்தைச் சேர்ந் தவர்களுக்கும் முன்னோடித் தலை முறையினருக்கும் பயனளித்து வருகிறது. "ஆனாலும் வயதாகும்போது பலரும் நீரிழிவு, உயர் ரத்த அழுத் தம் போன்ற நாள்பட்ட நோய் நிலைகளால் பாதிக்கப்படக்கூடும். "நம்மை நாமே நல்ல முறையில் கவனித்துக்கொள்வது, ஆரோக் கிய உணவு வகைகளை உட் கொள்வது, மருத்துவ சிகிச் சையை முறையாக எடுத்துக்கொள் வது, குடும்ப மருத்துவர் ஆலோ சனைப்படி நடப்பது போன்றவற்றின் மூலம் நமது வாழ்க்கையை நாம் முழுமையாக வாழ முடியும்.
"இதுபோன்ற நாட்பட்ட நோய் களுக்கான தொடர் மருத்துவக் கட்டணங்களுக்கு சிறியதொரு உதவி கிடைத்தால் நாம் எல்லா ருக்குமே அது பயனுள்ளதாக இருக்கும்," என்றார் பிரதமர். தற்போதைய சாஸ் திட்டம் மூன்றுவித உதவிமானியத்துட னான சிகிச்சை முறைகளை வழங்குகிறது. பொதுவான உடல் சுகவீனம், நாள்பட்ட சுகாதாரப் பிரச்சினை கள், குறிப்பிட்ட பல் தொந்தரவுகள் ஆகியவற்றுக்கான சிகிச்சைக் கான உதவி அது. மேலும், சாஸ் திட்டத்தில் உள்ளவர்கள் மலி வான கட்டணத்தில் சுகாதாரப் பரிசோதனைகளையும் செய்து கொள்ளலாம்.

