சிங்கப்பூர் உணவங்காடி கலாசாரம் யுனெஸ்கோ மரபுடைமைப் பட்டியலுக்குப் பரிந்துரைக்கப்படும்

2 mins read

சிங்கப்பூர் மரபுடைமையின் தனித் தன்மைமிக்க அம்சமாகவும் அடை யாளமாகவும் உணவங்காடி நிலை யங்கள் திகழ்ந்து வருகின்றன. அவை வாழ்க்கைச் செலவினங் களைக் குறைக்க உதவுவதுடன் நமது அன்றாட வாழ்க்கையையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. இப்படி பல சிறப்புகள்மிக்க உணவங்காடி நிலையக் கலாசா ரத்தை 'யுனெஸ்கோ' எனப்படும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், கலாசார நிறுவனத்தின் புலனாகா கலாசார மரபுடைமைப் பிரதிநிதிப் பட்டியலில் இடம்பெறச் செய்யும் முயற்சியாக சிங்கப்பூர் அதனைப் பரிந்துரைக்கவுள்ளது.

நேற்றைய தேசிய தினப் பேரணி உரையின்போது பிரதமர் லீ சியன் லூங் இதனை அறிவித்தார். "பெரும்பாலும் கணவன்= மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் இன்றைய சூழலில், வீட்டிலேயே சமைத்து உண்ணும் குடும்பங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. வெளியில் உண்டால் செலவு அதிகமாகும். இந்நிலையில், உணவுச் செலவைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உதவும் ஒரு வழி அதிகமான உணவங்காடி நிலையங்களைக் கட்டுவதுதான்," என்றார் பிரதமர். கட்டுப்படியாகக் கூடிய விலை யில் உணவருந்தக்கூடிய இடமாக உணவுக்கடைகள் விளங்குவதாக குறிப்பிட்ட திரு லீ, உணவங்காடி நிலையங்களில் உள்ள ஒவ்வொரு கடையிலும் $3 அல்லது அதற்கும் குறைவான விலையில் உண்ணக் கூடிய ஓர் உணவாவது கிடைக் கும் என்றும் சுட்டினார்.

கடந்த சில ஆண்டுகளில் ஏழு புதிய உணவங்காடி நிலையங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மேலும் 13 புதிய உணவங் காடி நிலையங்கள் வரவுள்ளன என்றும் தெரிவித்தார்.

உணவங்காடி நிலைய ஏலக் குத்தகையின்போது விலையை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அவற்றை நடத்துபவர்களால் கட் டுப்படியாகக்கூடிய விலையில் உணவு வகைகளை வழங்க முடி யுமா என்பதும் கவனத்தில் கொள் ளப்படுவதாக திரு லீ சுட்டினார்.

ருசியான உணவு வகைகளை கட்டுப்படியான விலையில் வழங்கி வாடிக்கையாளர்களின் மனங்களில் இடம்பிடித்து, கடந்த 22 ஆண்டுகளாக கிம் மோவில் தமது உணவுக் கடையை வெற்றிகரமாக நடத்தி வரும் திருமதி முத்துலட்சுமி வீரப்பன், 55. படம்: திமத்தி டேவிட்