'வாழ்க்கைச் செலவினத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க அரசாங்கம் பங்காற்றும்'

'வாழ்க்கைச் செலவினத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க அரசாங்கம் பங்காற்றும்'

2 mins read

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினம் குறித்து சிங்கப்பூரர் கள் கவலைகொண்டுள்ள நிலை யில், அதைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தன் பங்கை ஆற்றும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தங்களது வாழ்க்கைமுறையில் சில மாற்றங் களைச் செய்து மக்களும் தங்க ளது பங்கை ஆற்றவேண்டியது அவசியம் என்றும் அவர் வலி யுறுத்தியுள்ளார்.

உலகத் தரம் வாய்ந்த கல்வி, கட்டுப்படியாகக்கூடிய, உயர்தர சுகாதாரப் பராமரிப்பு போன்ற கார ணங்களால் முந்தைய தலைமுறை யினரைக் காட்டிலும் இப்போதைய சிங்கப்பூரர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளதாக திரு லீ குறிப்பிட்டார்.

ஆயினும், வாழ்க்கைச் செல வின நெருக்கடியை அவர்கள் உணர்வதாகக் கூறிய பிரதமர், அதற்குச் சில காரணங்களை யும் முன்வைத்தார்.

வீட்டு விலை, பாலர் கல்வியில் இளம் குடும்பங்களின் கவனம், பிள்ளைகளையும் பெற்றோரையும் பராமரிக்க வேண்டிய சூழலில் உள்ள மத்திய தலைமுறையின ருக்கு சுகாதாரப் பராமரிப்பு, கல்விச் செலவுகளில் கவனம் ஆகியவற்றை அவர் சுட்டினார். வாழ்க்கைச் செலவின அதிக ரிப்புக்கு மாறிவரும் வாழ்க்கை முறையும் காரணம் என்றார் அவர். "ஒரு காலத்தில் குளிரூட்டி, கைபேசி ஆகியவை சொகுசான வாழ்க்கையின் உதாரணங்களாக இருந்தன. ஆனால் இன்று அவை அன்றாட வாழ்வுக்கு இன்றியமை யாததாகிவிட்டன. தொலைத் தொடர்பு சேவைக்கே நூற்றுக்க ணக்கான வெள்ளி செலவாகிறது.

"அதுபோல, வெளியில் உண் பதும் விடுமுறையைக் கழிக்க வெளியிடங்களுக்குச் செல்வதும் அதிகரித்து வருகின்றன. வாழ்க் கைத்தரம் மேம்பட்டுள்ளது நல்ல விஷயம் என்றாலும் அதற்காக அதிகம் செலவழிக்க வேண்டி இருப்பது குடும்பங்கள் மீது நிதி நெருக்கடியை ஏற்படுத்தலாம்," என்று அவர் கூறினார். நான்காவதாக, பணவீக்கத்தை விலைவாசி உயர்வுக்குக் காரண மாகச் சொன்னார்.