சிங்கப்பூரும் மலேசியாவும் தங்கள் இருதரப்பு உறவை நிலையானதாக வும் நெருக்கமாகவும் வைத்திருந் தால் இரு நாடுகளும் தங்களுக் கிடையிலான ஒத்துழைப்பை வலுப் படுத்திக்கொள்வதோடு, தங்கள் உள்நாட்டு முன்னுரிமைகளிலும் அதிகக் கவனம் செலுத்தலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார். "மலேசியாவில் பிரதமர் மகாதீர் முகம்மது தலைமையில் புதிய அர சாங்கம் பொறுப்பேற்றிருந்தாலும் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவின் அடிப்படை அம்சங்களில் எவ்வித மாற்றமும் இல்லை.
"சொந்தங்கள், வரலாறு, புவியி யல், பொருளியல் ஆகியவற்றால் இரு நாடுகளும் பின்னி பிணைந் திருக்கின்றன," என்று திரு லீ நேற்று தமது தேசிய தினப் பேரணி உரையில் சிங்கப்பூர்=-மலேசிய உறவு பற்றி விளக்கினார். "இரு நாடுகளுக்கிடையேயுள்ள பொதுவான சவால்களைக் களைய நாம் இணைந்து பணியாற்ற வேண் டும். ஒருவேளை நமது நலன்கள் மாறுபட்டிருந்தால், அவற்றைக் களைய இரு நாடுகளும் ஆக்கபூர் வமான வழிகளை ஆராய வேண் டும்," என்று திரு லீ விவரித்தார்.

