வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட் டின் மூத்த வயது உரிமையாளர் தமது ஓய்வுக்கால ஆண்டுகளுக்கு நிதிஆதரவு பெறும் நோக்கில் வீட் டின் ஒரு பகுதி குத்தகையை அர சாங்கத்திடம் விற்கலாம். நடப்பிலுள்ள, குத்தகையைத் திரும்ப வாங்கும் திட்டம் நான் கறை வீடுகளுக்கும் அதற்கு சிறிய வீடுகளுக்கும் பொருந்தும். இந்நிலையில், ஐந்தறை வீடு கள் மற்றும் சிறிய எக்ஸிக்யூட்டிவ் வீடுகள் ஆகியன உள்ளிட்ட எல் லா வகை வீட்டின் உரிமையா ளர்களும் இனி 'எல்பிஎஸ்' எனப் படும் குத்தகை திரும்ப வாங்கும் திட்டத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பைப் பெற இருக்கிறார்கள். தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று இதனை தமது வலைப்பூ பதிவில் தெரிவி த்தார்.
பிரதமர் லீ சியன் லூங் நேற்று முன்தினம் நிகழ்த்திய தேசிய தினப் பேரணி உரையை தொடர்ந்து இதனைக் குறிப்பிட்ட திரு வோங், "இவ்வாறு நீட்டிப்பதன் மூலம் மேலும் அதிகமான சிங்கப்பூரர்கள் பலனடைவார்கள்," என்றார். "இது ஒரு நல்ல திட்டம். ஆனால், தற்போது நான்கறை அல்லது அதற்கும் சிறிய வீவக வீடுகளில் வசிப்பவருக்கே இது பொருந்தும். பெரிய வீடுகளில் வசிப்போருக்கும் இது பலன் தர வேண்டும் என்பது நமது நோக்கம். "வயது முதிர்ந்தோர் தங்களது பேரப் பிள்ளைகள் தங்களை வந்து பார்க்கவும் விரிவடைந்த குடும்பத் துக்கும் அதிக இடம் தேவைப் படுவதால் பெரிய வீடுகளில் வசிக்கிறார்கள். திட்டத்தின் பயன் அவர்களுக்கும் போய்ச் சேர வேண்டும்," என்றார் திரு வோங். பழைய வீவக வீடுகளை மேம் படுத்துவது, பழைய வீவக நகரங் களை புதுப்பிப்பது போன்ற பிரத மரின் தேசிய தினப் பேரணி அறி விப்புகளைச் சுட்டிய அமைச்சர், பல குறுகியகால நடவடிக்கைகள் மூத்தோர் தங்களது வீடுகளின் மதிப்பை ஓய்வுக்காலத்துக்குப் பயன்படுத்துவதில் உதவும் வகை யில் செயல்படும் என்றார்.

