ரயில் சாதன தகவல்களை தொகுக்க புது மென்பொருள்

ரயில் சாதன தகவல்களை தொகுக்க புது மென்பொருள்

1 mins read
8d80550a-5f88-4507-847e-91fc57d6861a
-

எம்ஆர்டி வழித்தடங்கள் முற்றிலும் உள்ள சாதனச் சொத்துகள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைப் பதற்கான கணினி மென்பொருள் ஒன்றை உருவாக்குவதற்காக $18.8 மில்லியன் ஒப்பந்தத்தை நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கி இருக்கிறது. சீமென்ஸ் மற்றும் எஸ்டி என்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் இணைந்த ஒரு கூட்டு நிறுவனத்துக்கு அந்த ஒப் பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஆணையத்தின் அறிக்கை நேற்று இந்த விவரங் களைத் தெரிவித்தது.

ரயில் சொத்து நிர்வாக முறை (Reams) என்று குறிப்பிடப்படும் அந்த மென்பொருள், ரயில் கட்ட மைப்பின் பல்வேறு சொத்துகளை யும் பகுதிப் பொருட்களையும் ஆராய்ந்து அவை எந்த நிலையில் செயல்பட்டு வருகின்றன. எந்த அளவுக்கு உறுதியாக இருக்கின் றன என்பதையெல்லாம் நன்கு தெரிந்துகொள்ள பொறியாளர் களுக்கு உதவும். ரயில் கட்டமைப்பு முழுவதும் உள்ள சொத்துகள் பற்றிய தகவல் களையும் பராமரிப்பு விவரங்களை யும் இந்த மென்பொருள் ஒருமுகப் படுத்திவரும்.

ரயில் கட்டமைப்பு சொத்து நிர்வாக முறை (Reams) என்ற ஒருங்கிணைந்த மென்பொருள் தகவல் தொகுப்பு முறை முதலில் டௌன்டவுன் வழித்தடத்தில் நடப்புக்கு வரும். படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்