$400,000 தொகையை உள்ளாடையில் மறைத்து தப்ப முயற்சி

1 mins read

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டேவிட் வெய்ட்மென், 37, என்ப வரும் ருமேனியாவை சேர்ந்த யூசூப் கிஸ், 40, என்பவரும் தங்களுடைய உள்ளாடையில் $400,000க்கும் அதிகமான தொகையை மறைத்து வைத்துக் கொண்டு சிங்கப்பூரை விட்டு தப்பிச்செல்ல முயன்றார்கள். அவர்கள் இருவரும் ஒரு தில்லுமுல்லு வியாபாரத்தில் முக வர்களாக செயல்பட்டு இருக்கிறார் கள். இருவரும் சென்ற செப்டம் பரில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கைதுசெய்யப்பட்டனர். குற்றச்செயல்களுக்கு வழி வகுக்கும் ஒரு சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகக் கூறும் மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் அந்த இருவரும் நேற்று குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு மொத்தம் 44 மாதம் சிறைத்தண்டனை விதிக் கப்பட்டது.

கப்பல் ஒன்றை விற்பதற்கு இடம்பெற்ற சிக்கலான $11 மில்லி யன் வியாபாரம் ஒன்றில் தரகுத் தொகையை வசூலிக்கும் ஒரு முயற்சியில் அந்த இருவரும் ஈடு பட்டு இருந்தது பற்றி அதிகாரி களுக்குத் தகவல் கிடைத்ததை யடுத்து இருவரும் பிடிபட்டனர்.