சிறுமிக்கு பாலியல் கொடுமை: ஆடவருக்கு 12½ ஆண்டு சிறை; 15 பிரம்படி தண்டனை

சிறுமிக்கு பாலியல் கொடுமை: ஆடவருக்கு 12½ ஆண்டு சிறை; 15 பிரம்படி தண்டனை

2 mins read

தன்னுடைய காதலியின் எட்டு வயது மகளை பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தியதற்காக 34 வயது ஆடவருக்கு 12½ ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட் டது. 15 பிரம்படிகள் கொடுக்கும் படியும் உத்தரவிடப்பட்டது. அவர் 2014ல் பள்ளி விடுமுறை நாளின்போது இந்தச் சட்ட விரோத காரியத்தை வீட்டில் செய் தார் என்று தெரிவிக்கப்பட்டது. சிறுமியை மூன்றாவது தடவை யாக அந்த ஆடவர் இத்தகைய காரியங்களுக்கு உட்படுத்தியதை யடுத்து அவரின் குற்றச்செயல்கள் அம்பலமாயின. அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த கதியைப் பற்றி பக்கத்து வீட்டுக் காரர் ஒருவரிடம் கூறினார். அதை அப்படியே ஒலிப்பதிவு செய்து அந்தப் பக்கத்து வீட்டுக்காரர், அந்தச் சிறுமியின் தாயார் கேட்கும் படி போட்டுக்காட்டினார். அதையடுத்து அந்த ஆடவரை அந்த 31 வயது மாது வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டார்.

ஆனால் தொடர்ந்து அந்த நபர் கெஞ்சி யதையடுத்து அவரை மறுபடியும் தன் வீட்டுக்குள் அந்த மாது அனு மதித்தார். இதனிடையே, தன் பேத்தியை அந்த ஆடவர் தலையில் தாக்கி யிருந்தார் என்பது அந்தச் சிறுமி யின் பாட்டிக்குத் தெரியவந்தது. அதனையடுத்து அந்தப் பாட்டி 2016 பிப்ரவரியில் அந்தச் சிறுமியை போலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சம்பவம் பற்றி போலிசிடம் புகார் தெரிவித்தார். தன் பேத்தி பாலியல் கொடு மைக்கு ஆளாகி இருந்தார் என் பது முன்பே அந்த 54 வயது பாட்டிக்குத் தெரியும். அந்த ஆடவர் மறுபடியும் அத்தகைய காரியத்தில் இறங்கக் கூடும் என்றும் அந்தப் பாட்டி கவலையுடன் இருந்தார். தான் 2014ல் மானபங்கத்திற்கு உள்ளானதாகவும் பல தடவை பாலியல் ரீதியிலான கொடுமைக்கு ஆளானதாகவும் போலிசிடம் அந்தச் சிறுமி தெரிவித்தார்.