போலிஸ் எச்சரிக்கை

போலிஸ் எச்சரிக்கை

1 mins read

'உங்களின் அன்புக்குரியவர் கடத்தி செல்லப்பட்டுள்ளார்' என்று கூறும் குறுஞ்செய்தி யாருக்காவது வந்தால் அது பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருந்துகொள்ளும்படி போலிஸ் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது. "உங்கள் பெண்ணை கடத் திச் சென்று இருக்கிறேன். அவர் பாதுகாப்புடன் திரும்பிவர வேண்டுமானால் இப்போதே $5,000 அனுப்புங்கள்," என்று அத்தகைய செய்திகளில் ஒன்று கேட்டுக்கொண்டது. அதோடு மட்டுமின்றி, அந்தச் செய்தி ஒரு மிரட்டலையும் விடுத் தது. "இது பற்றி போலிசிடம் தெரிவித்தால் பெண்ணைக் கொன்றுவிடுவேன்," என்று அந்தச் செய்தி பயமுறுத்தியது. இத்தகைய செய்திகள் பற்றி பொதுமக்களிடமிருந்து ஏராள மான புகார்கள் வந்திருப்பதாக போலிஸ் தெரிவித்தது.

இப்படிப்பட்ட செய்திகள் யாருக்காவது வந்தால், அமைதி யாக இருங்கள். பணத்தை அவ சரப்பட்டு மாற்றிவிடாதீர்கள். உங்கள் அன்புக்குரியவருடன் உடனடியாக தொடர்புகொண்டு அவரின் பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். குறுஞ்செய்திக்குப் பதில் செய்தி அனுப்பாதீர்கள். இத் தகைய செய்தியைத் தடுத்து விடுங்கள். போலிசுடன் 1800- 255-0000 என்ற எண் மூலம் தக வலைத் தெரியப்படுத்துங்கள். அல்லது www.police.gov.sg/ iwitness என்ற முகவரி மூலம் தகவல் அனுப்புங்கள் என்று போலிஸ் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது.