கட்டடங்களின் தீப்பாதுகாப்பு குறியீட்டில் திருத்தம்

கட்டடங்களின் தீப்பாதுகாப்பு குறியீட்டில் திருத்தம்

1 mins read

திறன்வாய்ந்த கணினிகள், தரவு பகுப்பாய்வு முறை போன்றவற்றின் உதவியுடன் கட்டடங்களுக்கான தீப்பாதுகாப்புக் குறியீட்டின்கீழ், தீப்பாதுகாப்பு விதிமுறைகளை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை திருத்தி அமைத்துள்ளது. கட்டடங்களின் உள்ளரங்கு களில் உகந்த அளவிலான கூடுத ல் புகை போக்கிகளை (smoke vent) உரிய இடங்களில் பொருத்து வது உள்ளிட்ட நடவடிக்கைகள் இந்தத் திருத்தங்களில் அடங்கும். அப்போதுதான், கட்டடத்தில் தீ ஏற்படுமாயின் அங்குள்ளவர்களை வெளியேற்றும் பணி கரும்புகை யால் தடைபடாது.

தீப்பாதுகாப்புக் குறியீட்டின் எட்டாவது பதிப்பு நேற்று தொடங்கி வைக்கப்பட்டபோது இந்த விவ ரங்கள் வெளியிடப்பட்டன. புதிய வீடுகளுக்கான புகை உணர்க் கருவி தொடர்பான விதிமுறைக ளும் அவற்றில் அடங்கும். இந்தப் புதிய விதிமுறையின்கீழ், ஒரே மாடி கொண்டுள்ள அனைத்து வீடுகளின் வரவேற்பு அறையில் புகை உணர்க்கருவி ஒன்று பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பல மாடிகள் கொண்டுள்ள வீடுகளில், ஒவ்வொரு மாடியிலும் குறைந்தது ஒரு புகை உணர்க் கருவியாவது பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படி ஒரு மாடியில் இடத்தின் பரப்பளவு 70 சதுர மீட்டருக்கும் கூடுதலாக இருந்தால் அம்மாடியில் இரு புகை உணர்க் கருவிகள் தேவைப்படும்.

இவ்வாண்டு ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகு சிங்கப்பூர் குடி மைத் தற்காப்புப் படையிடம் சமர்ப்பி க்கப்பட்ட கட்டட வரைப்படங்க ளுக்கு இந்தப் புதிய விதிமுறை பொருந்தும்.