சீன நிறுவனத்தின் 'பொன்ஸி' திட்ட மோசடி: போலிஸ் $27 மில்லியன் மீட்டது

சீன நிறுவனத்தின் 'பொன்ஸி' திட்ட மோசடி: போலிஸ் $27 மில்லியன் மீட்டது

2 mins read
286b4063-6655-42b3-a64e-86a041c6e7f7
-

சீனாவின் இஸுபாவ் நிறுவனத்தின் 'பொன்ஸி' திட்ட மோசடியில் சம்பந்தப்பட்ட $27 மில்லியனுக்கு மேலான தொகையை சிங்கப்பூர் போலிஸ் கைப்பற்றியுள்ளது. மோசடி மற்றும் மற்ற பிற குற்றங்களுக்காக பெய்ஜிங் நீதி மன்றம் இம்மாதம் 26 பேரைக் குற்றம் சாட்டியதில் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத் தண்டனை வழங்கப் பட்டன. இதனைத் தொடர்ந்து மோசடி செய்யப்பட்ட தொகை சீனாவிடமே மறுபடியும் ஒப்படைக் கப்பட்டு உள்ளது. சீனாவின் குற்றக் கட்டமைப் பின் படி பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகையாகவும் இது அமையும் என்று தகவல் தெரிவிக் கப்பட்டது.

இஸுபாவ் நிறுவனத்தின் நடவடிக்கை குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சீனாவின் குற்றப் புலனாய்வுத் துறைக்கு சிங்கப்பூர் போலிஸ் படையின் வர்த்தக விவகாரப் பிரிவு 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் நிறுவனத்தின் சொத்து, பொருள் விவகாரத்தில் உதவி வந்தது. இந்த பொன்ஸி திட்டம்வழி சுமார் 1.15 மில்லியன் முதலீட் டாளர்கள் பாதிக்கப்பட்டிருப்ப தாகவும் இதில் ஏற்பட்ட இழப்பின் மதிப்பீடு கிட்டத்தட்ட 38 பில்லியன் யுவான் (S$7.5 பில்லியன்) என்றும் அறியப்படுகிறது.

பெறப்பட்ட தொகையில் $27 மில்லியனுக்கும் மேலான தொகை சிங்கப்பூருக்கு மாற்றப்பட்டதாக அறிந்த வர்த்தக விவகாரப் பிரிவு உடனே சீனாவின் அதிகாரிகளு க்குத் தகவல் தெரிவித்ததாக சிங்கப்பூர் போலிசார் கூறினர். சீனாவின் பொருளியல் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் சிங்கப் பூரின் வர்த்தக விவகாரப் பிரிவு, சிங்கப்பூரில் உள்ள சீனாவின் தூதரகத்துடன் கூட் டிணைந்து இரு நாடுகளிலும் வழக்கு தொடர்பான விசாரணை நடத்தின. இது தொடர்பாக சிங்கப்பூரின் உள்ளூர் நிறுவனங்கள் பண மோசடி நடவடிக்கைகளில் சம்மந் தப்படவில்லை என்பதை வர்த்தக விவகாரப் பிரிவு 2016ன் மே மாதத்தில் கண்டறிந்தது.