கள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

கள்ள சிகரெட்டுகள் பறிமுதல்

1 mins read
53e41486-c0af-4204-bdb5-6992df3aeb3c
-

துவாஸ் சோதனைச்சாவடியில் சென்ற வியாழக்கிழமை அன்று சுமார் 4,000 பெட்டிகள் வரி செலுத்தாத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. குளிரூட்டிப் பெட்டிகளைச் சரக்குகளாகக் கொண்டிருப்பதாக மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரி ஒன்று குறிப்பிட்டிருந்த போதும், நுட்பச் சோதனையிடும் இயந்திரம் மூலம் அதிகாரிகள் சரக்குகளில் ஏதோ ஒழுங் கின்மை தென்பட்டதாக குடி நுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் நேற்று தன் ஃபேஸ் புக்வழி பகிர்ந்துகொண்டது. 47 வயது மலேசிய ஆடவரால் ஓட்டப்பட்ட வாகனத் தைக் கூடுதல் சோதனைகள் இட்டபின்னர் அதிகாரிகள் வரி செலுத்தாத சிகரெட்டுகளைக் கண்டுபிடித்தனர். சம்பவம் குறித்து மேலும் விசாரிக்க சிங்கப்பூர் சுங்கத் துறையிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப் பட்டுள்ளது. பாதுகாப்புத் தொடர்பிலான பொருட்களை சிங்கப்பூருக்குள் கள்ளத்தன மாகக் கொண்டுவர எண்ணு வோர் இதுபோன்ற மறைத்து வைத்துக்கொண்டு வரும் முறையைப் பின்பற்றலாம் என்றும் அது கவலைக்குரியது என்றும் ஆணையம் தெரிவித்தது.