பொருளியல் உறவு மேம்பாடு குறித்து இந்திய வர்த்தகர்கள் குழு ஆலோசனை

பொருளியல் உறவு மேம்பாடு குறித்து இந்திய வர்த்தகர்கள் குழு ஆலோசனை

1 mins read
bd5b5f05-5200-4fef-a383-7345bf628213
-

இந்தியாவின் முன்னணி வர்த் தக அமைப்பான இந்தியத் தொழில் துறைகள் கூட்டமைப்பின் நிர்வாகக் குழு பிரதிநிதிகள் 3 நாள் வருகையாக சிங்கப்பூர் வந்தனர். சிறிய, நடுத்தர வர்த்தகம் தொடங்கி பன்னாட்டு வர்த்தகம் வரை பலதரப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த தொழில் களை உள்ளடக்கிய இந்த அமைப்பைச் சேர்ந்தோர் சிங்கப் பூர் அமைச்சர்களைச் சந்தித்தனர். வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங், வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் ஆகியோரை அவர்கள் சந்தித்து உரையாடினர். கூட்டமைப்புக்கும் சிங்கப் பூருக்கும் இடையிலான 25 ஆண்டுகால நல்லுறவின் தொடர் பில் இங்கு வருகை தந்த அந்த 12 பேர் அடங்கிய குழு ஞாயிற்றுக்கிழமை முதல் நேற்று வரை இருந்தது.