தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குர்பான் சடங்கிற்கான ஏற்பாடுகள் சுமுகம்

2 mins read
44bc24f4-d715-4377-b13e-22beffce3d26
-

இன்று ஹஜ்ஜுப் பெருநாளை முன் னிட்டு குர்பான் சடங்கை மேற் கொள்வதற்கான அனைத்து ஏற் பாடுகளும் சுமுகமாக நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் இச்சடங்கு, இன்று தீவு முழுவதும் 26 நிலையங்களில் மேற்கொள்ளப்படும். குர்பான் சடங்கிற்காக பள்ளி வாசல் ஊழியர்களும் தொண்டூழி யர்களும் தயாராக உள்ளனர். ஆஸ்திரேலியாவிலிருந்து வர வழைக்கப்பட்ட ஆடுகளுக்கு போதிய பராமரிப்பு வழங்கப்படு வதை உறுதிசெய்ய உரிய நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளன.

முந்தைய ஆண்டுகளைப் போலவே சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்), சிங்கப்பூர் பள்ளிவாசல்கள் குர்பான் குழு (ஜேகேஎம்எஸ்), வேளாண்=உணவு கால்நடை மருத்துவ ஆணையம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குர்பான் சடங்கு மேற்கொள்ளப்படும் நிலையங்களில் இருப்பர். கால்நடை விலங்கு நலம், உணவுச் சுகாதாரத் தரநிலைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து நிலையங்களிலும் இச்சடங்கு தரநிலை செயல்பாட்டு நடைமுறைகளைச் சரிவர பின்ப ற்றும். ஆஸ்திரேலியாவிலிருந்து சிங் கப்பூருக்கு இரு விமாங்கள் மூலம் 3,700 ஆடுகள் நேற்று முன்தினம் பாதுகாப்பாக வந்து சேர்ந்தன.

அவை அனைத்தும் 26 குர்பான் நிலையங்களுக்கு மாற்றிவிடப்ப ட்டன. குர்பான் சடங்கு இங்கு சுமுக மாக நடைபெறுவதை உறுதிசெய்ய இதில் சம்பந்தப்பட்டிருக்கும் அமைப்புகளுக்கும் தொண்டூழியர் களுக்கும் தமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரி வித்துக்கொண் டார் சுற்றுப் புற, நீர்வள அமைச்சரும் முஸ்லிம் விவ காரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரு மான திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி.

செம்பவாங் ரோட்டிற்கு அருகே அமைந்துள்ள அஹமது இப்ராஹிம் பள்ளிவாசலில் ஹஜ்ஜுப் பெருநாளுக்கான ஏற்பாடுகள் நேற்று முழுவீச்சில் நடைபெற்றன. படம்: லிம் சின்தாய்