தற்காப்பு அமைச்சு: எழுத்தாளர் கெவின் குவான் தேடப்படுகிறார்

தற்காப்பு அமைச்சு: எழுத்தாளர் கெவின் குவான் தேடப்படுகிறார்

1 mins read
e81cde11-c3fe-4a21-9ead-029f8d6af489
-

சிங்கப்பூரில் பிறந்த எழுத்தாளர் கெவின் குவான் (படம்), தனது தேசிய சேவை கடமையை நிறைவேற்ற தவறியதாக தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரைப் பின்புலமாகக் கொண்ட 'கிரேசி ரிச் ஏ‌ஷியன்ஸ்' என்ற நகைச்சுவை திரைப்படம், திரு குவான் எழுதிய நூலின் தழுவலாக உள்ளது. "1990இல் திரு குவான், தேசிய சேவைக்குப் பதிவு செய்யத் தவறினார். இது குறித்த கடிதங்கள் அவரது வெளிநாட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தன. உரிய அனுமதியின்றி அவர் வெளிநாட்டில் தங்கியிருந்தார்.

திரு குவான் தனது தேசியச் சேவைக் கடமையை ஆற்றத் தவறியுள்ளதால் அவர் தேடப்படும் நபராக உள்ளார்," என்றது தற்காப்பு அமைச்சு.

"1994ஆம் ஆண்டில் தனது குடியுரிமையைத் துறப்பதற்காக அவர் செய்திருந்த விண்ணப்பமும் அதற்கு பின்னர் அவர் செய்த மேல்முறையீடும் நிராகரிக் கப்பட்டன," என்றது அமைச்சு. தேசியச் சேவை தொடர்பான சட்டத்தின்படி, திரு குவானுக்கு $10,000 வரையிலான அபராதம், மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.