'கிராப்' நிறுவனத்தின் 200 மின்சார வாகனங்கள்

'கிராப்' நிறுவனத்தின் 200 மின்சார வாகனங்கள்

1 mins read

வாடகை கார் சேவை நிறுவனமான 'கிராப்', 'எஸ்பி' குழுமத்துடன் இணைந்து அடுத்தாண்டு முதல் 200 புதிய மின்சார வாகனங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. 'கிராப்ரெண்டல்ஸ்' என்ற பிரிவின் கீழ் இந்த வாகனங்கள் படிப்படியாக சாலைகளில் பயணம் செய்யும் என்று 'கிராப்' நிறுவனம் நேற்று அறிவித்தது. 'எஸ்பி' குழுமத்தின் மின்சார வாகனங்களுக்குரிய மின்னூட்டு நிலையங்களில் 'கிராப்' நிறு வனத்தின் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களுக்குக் கட்டணச் சலுகைகள் கிடைப்பதுடன் மின்னூட்டு நிலையங்களைப் பயன்படுத்தும் அனைத்து ஓட்டுநர்களுக்கும் காரை நிறுத்தி வைப்பதில் கட்டணக் கழிவும் இருக்கும். நாட்டின் பல இடங்களிலும் அமைக்கப்படவுள்ள இந்த கார்களுக்கான மின்னூட்டு நிலையங்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டுக்குள் 500 ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது.