மூலாதார பணவீக்கம் 1.7% உயர்வு

1 mins read

சிங்கப்பூரின் மூலாதார பண வீக்கம் கடந்த நான்கு ஆண்டு களில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத் தில் 1.9 விழுக்காடு உயர்ந்துள்ளது. மின்சாரம், எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணம் என சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக தொழில் அமைச்சும் வெளியிட் டுள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகி ன்றன. எனினும், இது அனைத்துப் பொருட் களின் பயனீட்டாளர் விலைக் குறியீட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வில்லை. இதன்படி, ஆண்டுக்காண்டு அடிப்படையில் பணவீக்கம் 0.6 விழுக்காடாகவே உள்ளது. தனியார் சாலைப் போக்கு வரத்துச் செலவு, சேவைத்துறையில் குறைந்த செலவு ஆகியவற்றால் மற்றவற்றில் உயர்ந்த விலைவாசி சரிசெய்யப்பட்டு விட்டது. என்றாலும், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து உலக ளாவிய எண்ணெய் விலை ஏற்றத்தினால் இறக்குமதிகளில் விலைவாசி உயர்வு ஏற்படும். மேலும் தேவை அதிகரிப்பதால் உலகளவில் உணவுப் பொருட் களின் விலையும் ஏற்றம் காணும் என கணிக்கப் படு கிறது. ஊழியர்களின் சம்பள உயர் வினாலும் உள்நாட்டுத் தேவை அதிகரிப்பினாலும் உள்நாட்டு தயாரிப்பிலும் விலைவாசி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.