இரு வாகனங்கள் மோதல்; மருத்துவமனையில் பெண் ஓட்டுநர்

இரு வாகனங்கள் மோதல்; மருத்துவமனையில் பெண் ஓட்டுநர்

1 mins read

பாசிர் ரிஸ் டிரைவ் 3ஐ நோக்கிச் செல்லும் பாசிர் ரிஸ் டிரைவ் 6ல் நேற்று முன்தினம் இரு வாகனங்கள் மோதிக்கொண்டன. ஒரு வாகனத்தில் இருந்த 41 வயது பெண் ஓட்டுநர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மாலை 6.15 மணிக்கு இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். இரு வாகனங்களிலும் ஓட்டுநர்கள் மட்டும் இருந்ததாகவும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பெண் ஓட்டுநரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கூறப்படுகிறது. விபத்து குறித்த போலிஸ் விசாரணை தொடர்கிறது.