$250,000 மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

$250,000 மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

1 mins read
Google News Preferred Icon

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (சிஎன்பி) நேற்று முன்தினம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் $250,000 மதிப்பிலான பல்வேறு போதைப்பொருட்கள் சிக்கின. அதன் தொடர்பில் சிங்கப்பூரர்கள் எழுவர் கைதுசெய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையில் 3.53 கிலோ எடையுள்ள ஹெராயின், 2 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா, 162 கிராம் எடையுள்ள ஐஸ் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப் பட்டதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.

மேலும், 45 எக்ஸ்டசி மாத்திரை கள், மீதாடோன் நிரம்பிய ஒரு போத்தல், $21,170 ரொக்கம் ஆகியவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர். அதிகாரிகளின் விரைவான, தீர்க்கமான நடவடிக் கைகளால் ஒரு பெரிய போதைப் பொருள் கடத்தும் கும்பலின் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்ட தாக சிஎன்பி குறிப்பிட்டது.

உட்லண்ட்ஸ் கிரசென்டுக்கு அருகில், போதைப்பொருள் கடத் துபவர் எனச் சந்தேகிக்கப்படும் நபரின் மறைவிடமான வீட்டை சிஎன்பி அதிகாரிகள் நேற்று முன்தினம் கண்காணிக்கத் தொடங்கினர். குறிப்பிடத்தக்க அளவிலான போதைப்பொருட் களை அந்த 35 வயது நபர் கையாளுவதாக நம்பப்பட்டது. மற்றொரு 43 வயது சிங்கப்பூரர் அந்த வீட்டுக்குள் நுழைந்ததை அடுத்து சிஎன்பியின் சிறப்பு பணிக்குழு அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தது.