வாழ்க்கைத்தொழிலுக்கு வழிகாட் டும் நிபுணர்களின் திறன்களை மேம்படுத்தவும் அவர்களை அங் கீகரித்து சான்றிதழ் வழங்கவும் புதிய ஏற்பாடு ஒன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் வாழ்க்கைத் தொழில் பயிற்றுவிப்பாளர்களின் நிபுணத்துவம் உறுதிப்படுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ சொன்னார். சிங்கப்பூர் ஊழியர் அணி வாழ்க்கைத் தொழில் மேம்பாட்டு கட்டமைப்பு தொடங்கி வைக்கப் பட்ட நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
கடந்த ஆண்டு வரை வாழ்க்கைத் தொழில் பயிற்றுவிப் பாளர்கள் என்றும் அழைக்கப்படும் வாழ்க்கைத் தொழில் வழிகாட் டிகள், 'மாற்றியமைத்துக் கொண்டு வளர்ச்சியடைதல்' திட்டத்தின்கீழ் வேலை தேடிய 25,000 பேருக்கு உதவி செய்துள்ளனர். "வாழ்க்கைத் தொழில் சமூகத் துக்கு நிபுணத்துவமும் தரமும் முக்கியம். இந்தச் சமூகத்தில் திறன் மிக்கவர்களை ஈர்க்க வாழ்க்கைத் தொழிலுக்கு வழிகாட் டும் நிபுணர்களின் திறன்களை மேம்படுத்துவதில் முதலீடு செய் வது அவசியம்," என்று அமைச்சர் ஜோசஃபின் டியோ குறிப்பிட்டார்.

